ராய்ச்சூரில் உள்ள நவோதயா பொறியியல் கல்லூரியில் கட்டடப் பொறியாளர் படிப்பு பயின்று வந்த மாணவி மது. மூன்று நாட்களுக்கு முன் கல்லூரிக்குச் சென்ற இவர் இரவுவரை வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இரண்டு நாட்கள் கழித்து காட்டுக்குள் இவரது உடல் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டது.
ராய்ச்சூரில் உள்ள நவோதயா பொறியியல் கல்லூரி முகப்பு நவோதயா கல்லூரியிலிருந்து சுமார் 6 கிமீ தொலைவில் உள்ள காட்டுப் பகுதிக்குள், பாதி உடல் எரிக்கப்பட்டு, தூக்கில் தொங்கிய நிலையில் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் அருகிலிருந்து கண்டெடுக்கப்பட்ட காகிதத்தில், ‘எனக்குப் படிப்பு சரியாக வரவில்லை. பல முறை முயன்றும், சில பாடங்களில் தோல்வியடைந்தேன். அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், மாணவி தற்கொலை செய்துகொண்டார் எனக்கூறி காவல்துறையினர் வழக்கை மூடி மறைக்க முயல்வதாக மனித உரிமை அமைப்பினரும், மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.
இதனால், மாணவி மதுவுக்கு நியாயம் வேண்டி #JusticeForMadhu எனும் கையெழுத்து இயக்கம் ஒன்றைத் தொடங்கி சுமார் 50 ஆயிரம் பேர் அதில் இணைந்துள்ளார்கள். மேலும், தேர்தல் நேரம் என்பதால் இதனை அதிகாரிகள் ரகசியமாகக் கையாளுகிறார்கள் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்நிலையில் மாணவியின் தாயார் கொடுத்த புகாரை முதலில் வாங்க மறுத்த காவல்துறை தற்போது, வழக்காக எடுத்து விசாரித்ததில், சுதர்சன் யாதவ் என்பவர் சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சுதர்சன் யாதவ்