ETV Bharat / jagte-raho

சேலம் தீ விபத்து சதித்திட்டமா? - திடுக்கிடும் தகவல்கள்

சேலம் : நரசோதிபட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதா என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author img

By

Published : Sep 5, 2020, 7:31 PM IST

சேலம் தீ விபத்தே சதித்திட்டம் தான் -திடுக்கிடும் தகவல்கள்

சேலம் 5 ரோடு அருகே உள்ள நரசோதிபட்டியில் அன்பழகன், கார்த்திக் என்ற சகோதரர்களுக்கு சொந்தமான வீடு உள்ளது. சகோதரர்கள் இருவரும் மர அறுவை ஆலைத் தொழில் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இவர்களது வீட்டில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நள்ளிரவு 12 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கார்த்திக், அவரது மனைவி, மகன்கள், அன்பழகன், அவரது மனைவி என ஐந்து பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

கார்த்திக், அன்பழகன் இருவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இதன் மூலமாக சேலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலங்களை வாங்கி வைத்துள்ளனர். மேலும், தங்களுக்கு சொந்தமான மர அறுவை ஆலை அருகே உள்ள நிலத்தை வாங்க இருவரும் முடிவு செய்து, அதற்கான முதற்கட்ட தொகையையும் செலுத்தி உள்ளனர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிவந்துள்ளது.

இதனிடையே, எரிந்து போன வீட்டில் இருந்த 50 லட்சம் ரூபாய் பணத்தை தற்போது காவல்துறையினர் மீட்டுள்ளதாக அறியமுடிகிறது. இது குறித்து காவல்துறை வட்டாரங்களிடம் கேட்டபோது, "இந்த தீ விபத்தின் போது கார்த்திக் இருந்த அறையிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி வெடித்து சிதறியுள்ளது. அதேபோல குளிர்சாதன பெட்டியும் வெடித்து சிதறியுள்ளது. இதன் காரணமாக அறை முழுவதும் புகை நிரம்பியதால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர்கள் இறந்தனர்.

கார்த்திக்கின் பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டிருந்த அன்பழகனின் மனைவி புஷ்பாவும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த விபத்தில் அன்பழகனின் மகன், மகள் இருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து சேலம் சூரமங்கலம் உதவி ஆணையாளர் நாகராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விபத்து திட்டமிட்ட சதியாக இருக்கும் என சந்தேகித்து நிலவிவரும் சூழலில், கார்த்திக் மற்றும் அன்பழகன் இருவருக்கும் முன்பகை ஏதேனும் உள்ளதா ? அல்லது வெளி நபர்களுடன் கொடுக்கல் வாங்கல் தகராறு உள்ளதா ? அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் ? நில வணிகத்தில் முன்விரோதம் உள்ளதா ? என்று அனைத்து கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது" என தகவல் தெரிவித்தனர்.

மின்கசிவு காரணமாக இவ்வளவு பெரிய தீ விபத்து ஏற்பட வாய்ப்பில்லை என்றும் திட்டமிட்ட சதியால் இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்றும் அந்த பகுதியில் பேசப்பட்டுவருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.