ETV Bharat / jagte-raho

மிரட்டிப் பணம் பறிப்போர் பற்றி தயங்காமல் புகாரளிக்க காவல் துறை வேண்டுகோள்!

சென்னை: பிரச்னை ஏற்பட்டால் பொதுமக்கள் தயங்காமல் உடனே காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என மயிலாப்பூர் துணை ஆணையர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

arrest
arrest
author img

By

Published : Feb 24, 2020, 9:08 PM IST

சென்னையில் பெண் குரலில் பேசி 1000-க்கும் மேற்பட்ட ஆண்களை நூதன முறையில் மோசடி செய்த திருநெல்வேலி மாவட்டம் பனங்குடியைச் சேர்ந்த ராஜ்குமார் ரீகன் என்ற இளைஞரை மயிலாப்பூர் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை ஆணையர் சேகர் தேஷ்முக், ” 2017 ஆம் ஆண்டு முதல் லோக்காண்டா செயலியிலிருந்து பொதுமக்களின் எண்களைத் திருடி, பெண் குரலில் பேசி மிரட்டிப் பணம் பறித்து வந்துள்ளார். மேலும் இவர் மீது மயிலாப்பூரில் மட்டும் சுமார் 144 புகார்கள் வந்துள்ளன. சென்னை முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்திருக்கின்றன.

மிரட்டி பணம் பறிப்போர் பற்றி தயங்காமல் புகாரளிக்க காவல்துறை வேண்டுகோள்!

இவர் 10 லட்ச ரூபாய்க்கும் மேல் மிரட்டிப் பணம் பறித்துள்ளார். இது குறித்து ஏமாற்றப்பட்ட ஆண்கள் பலர் மானத்திற்குப் பயந்து புகார் தரவில்லை. இனி இதுபோன்று மிரட்டிப் பணம் பறிக்கும்போது பயப்படாமல் உடனடியாகப் பொதுமக்கள் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்க வேண்டும்” என வேண்டுகோள்விடுத்தார்.

இதையும் படிங்க: மயக்கும் பெண் குரல்... மயங்கிய ஆண்கள்... திணறிய காவல்துறை...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.