ETV Bharat / jagte-raho

பிறந்து 40 நாளான பெண் குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்த தாய் - மேற்கு வங்கத்தில் கொடூரம் - மேற்குவங்கம் மாநிலம்

பிறந்து 40 நாளே ஆன பெண் குழந்தையை பெற்ற தாயே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ரகுநாத்பூர் கிராமத்தில் அரங்கேறியுள்ளது.

Mother killed 40-day-old girl child
Mother killed 40-day-old girl child
author img

By

Published : Oct 9, 2020, 5:38 PM IST

Updated : Oct 9, 2020, 6:11 PM IST

கொல்கத்தா: பெற்ற குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்த தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேற்குவங்க மாநிலத்தில் பஹ்ராம்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரகுநாத்பூர் என்ற கிராமத்தில் வசித்துவரும் சைதாலி மண்டல் எனும் பெண், பிறந்து 40 நாளான தனது பெண் குழந்தையை கழிவறைக்கு எடுத்துச் சென்று கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

அதன்பின் தப்பித்து ஓடமுயன்ற அந்த பெண்ணை, கிராமவாசிகள் விரட்டிப் பிடித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பஹ்ராம்பூர் காவல் துறையினர், அந்த குழந்தையின் உடலை மீட்டனர். பின்னர் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணை கைது செய்தனர்.

பிறந்து 40 நாளான பெண் குழந்தை கொலை

இதுகுறித்த விசாரணையில், சைதாலி மண்டல் சிறிது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நகை கடையில் நஷ்டம்: உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை!

Last Updated : Oct 9, 2020, 6:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.