தாம்பரம் தொடர்வண்டி நிலையம் கிழக்குப் பகுதியில் மெட்ராஸ் காபி ஹவுஸ் என்ற கடை உள்ளது. இங்கு இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைப் பார்த்த அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் உடனடியாக தொடர்வண்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனே தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன் தீயை அணைத்தனர்.
கடையில் உள்ள மின்சார பெயர்ப் பலகையிலிருந்து மின்கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. இந்தத் தீ விபத்தால் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து தொடர்வண்டி நிலைய காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: குன்னூர் வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீ - போராடி அணைத்த தீயணைப்புத் துறை!