மதுரை எஸ். ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுமணி. இவர் அதே பகுதியில் காளான் வியாபாரம் செய்துவருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் முன்பக்க கதவை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்தனர்.
இதையடுத்து வீட்டினுள் இருந்த பீரோவில் வைக்கப்படடிருந்த 44 சவரன் நகை, இரண்டு லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுனர்.
இதைத்தொடர்ந்து காலையில் எழுந்து பார்த்த வேலுமணி, வீட்டின் கதவு உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், பீரோவும் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தார்.
பின்னர் இது தொடர்பாக காவல் துறையினருக்குத் தகவல் அளித்தார். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், மோப்ப நாய் உதவியுடன் கொள்ளை நடந்த பகுதியை ஆய்வு மேற்கொண்டு, கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.
வீட்டின் உரிமையாளர்கள் வீட்டினுள் இருந்தபோதே நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.