ETV Bharat / jagte-raho

பிறந்து 14 நாள்களே ஆன ஆண் குழந்தையை மாடியிலிருந்து தூக்கி வீசிய தாய்! - ஹைதராபாத் கொலை

பிறந்து 14 நாள்களே ஆன ஆண் குழந்தையை மூன்றாவது மாடியிலிருந்து தூக்கி வீசிய கல் நெஞ்சம் கொண்ட தாயை காவலர்கள் கைதுசெய்தனர்.

MERCILESS MOTHER KILLED HER BABY, mother killed her baby, baby killed in hyderabad, குழந்தையை கொன்ற தாய், hyderabad crime, telangana crime, பச்சிளம் குழந்தை கொலை, ஹைதராபாத் கொலை, mother killed baby
mother killed baby
author img

By

Published : Nov 14, 2020, 9:36 PM IST

ஹைதராபாத் (தெலங்கானா): நெஞ்சை பதை பதைக்க செய்யும் இந்த அதிர்ச்சி சம்பவம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை (நவ13) நடந்துள்ளது.

ஹைதராபாத் குத்புலாபூர் பகுதியை சேர்ந்தவர் நோதி வேணுகோபால். இவரது மனைவி ஃபதேநகர் தேதாஜி பகுதியை சேர்ந்த லாவண்யா. இவர்களுக்கு 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இந்தத் தம்பதியருக்கு 2017ஆம் ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் கணவர்- மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பிறந்த வீட்டில் பாதி நாள்கள், புகுந்த வீட்டில் மீதி நாள்கள் வசிக்கும் நிலைக்கு லாவண்யா தள்ளப்பட்டார்.

இதற்கிடையில் லாவண்யா மீண்டும் கர்ப்பம் தரித்தார். அவருக்கு, இரண்டு வாரத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்து 14 நாள்களே ஆன இக்குழந்தையைதான், லாவண்யா மூன்றாவது மாடியிலிருந்து தூக்கி வீசி கொன்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக வேணுகோபால் அளித்த புகாரின் பேரில், சாந்தி நகர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து கவிதாவை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: ஜீவனாம்சம் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறால் உறவினர்களே சுட்டுக்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.