வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர், விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளார்.
இதில் ஜெய்சங்கர், மகளின் திருமணத்திற்காக தனது சொந்தமான 1.75 சென்ட் நிலத்தில் 50 சென்ட் நிலத்தை விற்றுள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை ஜெய்சங்கர் தனது நிலத்தில் நாட்டுத் துப்பாக்கியால் தன்னைதானே சுட்டு கொண்டு உயிரிழந்துள்ளார். பின்பு ஜெய்சங்கரை தேடிய அவரது குடும்பத்தினர் நிலத்தில் அவர் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெய்சங்கர் உடலை கைப்பற்றி உடற்கூறாவிற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தன் மகளுக்காக தன் உயிரை நீத்த தந்தையின் அன்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.