நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது புளியம்பாறை அரசு தொடக்கப் பள்ளி. இப்பள்ளியில் நான்காம் வகுப்புப் படித்துவந்த மாணவன் ஹரிகரன்(9). இவர் பள்ளியில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது பள்ளியின் மாடிமீது பந்து விழுந்துள்ளது.
சிறுவன் அதை எடுக்க சென்றபோது மின்சாரக் கம்பிகள் தரையில் இருந்ததை கவனிக்காமல் சென்றுள்ளார். இதையடுத்து, தரையிலிருந்த கம்பிமீது கால் வைத்ததால் மின்சாரம் தாக்கி ஹரிகரன் உயிரிழந்தார்.
![Nilagiri நீலகிரி கூடலூரில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் பலி இரண்டு பேர் பலி மின்சாரம் தாக்கி Kudalur Electricity struck two of them dead Electricity struck two of dead](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4400929_nil-1.bmp)
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே கூடலூரை அடுத்த சளிவயல் பகுதியைச் சேர்ந்தவர் லுக்கா(55). இவர் விவசாயதிற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு மோட்டாரை இயக்க முற்பட்டபோது மின்சாரம் தாக்கி இறந்தார். இதுகுறித்து கூடலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே நாளில் இரண்டு பேர் மின்சாரம் தாக்கி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.