ETV Bharat / jagte-raho

திரைப்பட பாணியில் தனியாக இருக்கும் பெண்கள் வீட்டில் கொள்ளை; சிக்கிய கொள்ளை கும்பல் தலைவி! - ஓசூர் வேலு நகர்

திரைப்பட பாணியில் பெண்கள் தனியாக இருக்கும் வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடித்த கும்பலின் தலைவி, அவரது தலைமையில் இயங்கிவந்த மொத்த கூட்டத்தையும் கூட்டாக கைது செய்த சிப்காட் காவல் துறையினருக்கு காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொள்ளையர்கள்`
கொள்ளையர்கள்
author img

By

Published : Sep 13, 2020, 2:15 PM IST

கிருஷ்னகிரி: ஓசூரில் வீட்டில் தனியாக உள்ள பெண்களை நோட்டமிட்டு கொள்ளையடிக்க தொடங்கிய கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் மாநகராட்சியிலுள்ள வேலு நகரில் வசித்து வருபவர் பார்த்திபன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். செப்டம்பர் 2ஆம் தேதியன்று பார்த்திபன் வேலைக்குச் சென்ற நிலையில் அவரது மனைவி சர்மிளா, மகன்களுடன் பக்கத்து வீட்டு பெண் இருந்த நிலையில், 5 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் உள்ளே நுழைந்து, வீட்டிலிருப்பவர்களைத் தாக்கி 8.5 பவுன் தங்கத்தை கொள்ளையடித்து சென்றதாக பாதிக்கப்பட்ட சர்மிளா ஓசூர் சிப்காட் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கிய சிப்காட் காவல் துறையினர், கொள்ளைபோன நாளன்று பக்கத்து வீட்டு பெண்ணான பூமிகாவிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.

அப்போது, பூமிகாவின் காதில் இருந்த ஒருப்பக்க கம்மலை கொள்ளையர்கள் பறித்து சென்றதாக அவர் அளித்த வாக்குமூலம் காவல் துறையினருக்கு சந்தேகத்தைக் கிளப்பியது.

மதுபோதையில் குத்தாட்டம் போட்ட பேரூராட்சி செயல் அலுவலர்: வீடியோ வைரல்...!

ஒட்டுமொத்த காவல் துறையினரின் கவனமும் பூமிகா மீது திரும்பிய நிலையில், அதன்பின்னர் அவரளித்த தகவல்கள், விசுவின் திரைப்படமான சிதம்பர ரகசியம் படத்தில் அமைந்திருக்கும் காட்சியான, “வயதான பாட்டி ஒருவர் வேலைக்காக சில வீட்டுக்குச் சென்று, அந்த வீட்டில் யார் யார் உள்ளார்கள் என குற்றவாளிகளுக்கு தகவல் கொடுத்து, அதன் பிறகு அந்த வீட்டை கொள்ளையடிக்கும் முயற்சியில் இறங்குவர்” என்பது போன்ற காட்சியை நினைவுபடுத்தும் விதமாக இருந்தது.

இதனைக் கேட்ட காவல் துறையினர் திகைத்துள்ளனர். திரைப்படங்களில் வரும் கதையைப் போலவே, சின்ன எலசகிரி வேலு நகரிலுள்ள சர்மிளா குடும்பத்தாரை பக்கத்து வீட்டில் இருந்த கொள்ளைக் கும்பலின் தலைவி பூமிகா நீண்ட நாட்களாக நோட்டமிட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று பகல் நேரத்தில் பூமிகாவின் கிழிந்த துணியைத் தைத்துத் தருமாறு சர்மிளா வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

வாய் பேச முடியாத காதல் ஜோடி தற்கொலை - வெளியான வீடியோ

பின்னர் வீட்டில் பிள்ளைகளும், சர்மிளாவும் மட்டுமே இருந்ததை உறுதிசெய்து கொண்டு பெங்களூரைச் சேர்ந்த தனது கொள்ளை கும்பலுக்குத் தகவலளித்துள்ளார். அதிரடியாக நுழைந்த கொள்ளையர்கள் பூமிகா மீது சந்தேகம் வரக்கூடாதென்பதற்காக அவரையும் தாக்கி, சர்மிளாவின் காதில் இருந்த கம்மலை பறித்து சென்றுள்ளனர்.

இதில் அவர் காதில் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கத்தியால் பிள்ளைகளை மிரட்டி 8.5 சவரன் தங்க நகைகளை பறித்து சென்றதாக அதிர்ச்சி தகவலை காவல் துறையினரிடம் ஒப்புதல் வாக்குமூலமாக பூமிகா அளித்துள்ளார்.

இதனையடுத்து முதற்கட்டமாக கொள்ளை கும்பலின் தலைமையாக செயல்பட்ட பூமிகா, பிரசாந்த் ஆகியோரை கைதுசெய்த சிப்காட் காவல் துறையினர் சஞ்சய்(25), புட்டராஜு(25), கிரண்(25) நாகராஜ்(23) ஆகிய 4 கொள்ளையர்களை கர்நாடக மாநிலத்திற்குள் சென்று அதிரடியாக கைதுசெய்து வந்தனர்.

மொத்தமாக 6 பேரை கைது செய்துள்ள சிப்காட் காவல் துறையினர் அவர்களிடமிருந்து தங்க நகைகளை பறிமுதல் செய்து, இவர்கள் மீது பிற மாநிலங்களில் அல்லது தமிழ்நாடு காவல் நிலையங்களில் வேறு ஏதேனும் புகார்கள் பதிவாகி உள்ளனவா எனவும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உதகையில் இரண்டாவது சீசன் மலர் கண்காட்சி!

இந்த சம்பவத்தின் தன்மையை அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், ஓசூர் காவல் துணை கண்காணிப்பாளர் முரளி மூலம் நகையை கொள்ளையடித்து சென்ற ஒரு வாரத்துக்குள் தனிப்படை அமைத்து சாதுரியமாக குற்றவாளிகளை கைதுசெய்தும், அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை மீட்கவும் செய்த ஓசூர் சிப்காட் காவல் துறையினருக்குப் பாராட்டுகளை தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.