தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி-கோம்பை சாலையில் கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்டையில், உத்தமபாளையம் காவல்துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு பெண்ணும் ஆணும் கையில் பையுடன் நடந்து வருவதைக் கண்ட காவல் துறையினர் அவர்களை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவர்களிடமிருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர்கள், கம்பத்தைச் சேர்ந்த ஈஸ்வரன், செல்லத்துரை என்பவரின் மனைவி மொக்கபிள்ளை என்பதும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் கம்பம் பகுதியில் விற்பனை செய்வதற்காக ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.