தமிழ்நாடு - ஆந்திர எல்லைப்பகுதியான எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில், ஆரம்பாக்கம் காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி, விடியற்காலையில் ஆந்திராவிலிருந்து வந்த கார் ஒன்றை சோதனையிட்டபோது, அதில் 25 பண்டல்கள் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து காரில் பயணித்த மூன்று நபர்களிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள், கேரளாவைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், சத்தியவேல், மதுரையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பதும், விஜயவாடாவில் இருந்து 50 கிலோ கஞ்சாவை அவர்கள் கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த காவல் துறையினர், கேரளாவுக்கு யாருக்காக இந்த கஞ்சா கடத்தப்படுகிறது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திடீர் ரெய்டு : கணக்கில் வராத இரண்டரை லட்ச ரூபாய் பறிமுதல்