சென்னை சௌகார்பேட்டை என்எஸ்சி போஸ் சாலையில் மோகன் லால் ஜுவல்லர்ஸ் மொத்த நகைக்கடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் மோகன்லால் முகுந்த் சந்த் கட்டாரி. இவர்களது குடும்பத்தினர் சாந்திதேவி, மோகன்லால், சுரேஷ்குமார், ரேகா, ஸ்ரீதேவி ஆகியோர் இயக்குனர்களாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிறுவனம் பல்வேறு பிரபல நகைக்கடைகளுக்கு நகைகளை மொத்தமாக டிசைன் செய்து அனுப்புகிறது. ஆனால் இந்நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில், கேரளாவிலும், சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட 32 இடங்களில் வருமான வரித்துறை அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் கீழ்ப்பாக்கம், தம்புசாமி சாலையில் உள்ள மோகன்லால் முகுந்த் சந்த் கட்டாரி இல்லத்தில் பத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தற்போது, தங்கம் வாங்கி விற்பனை செய்த வரவு செலவு ஆவணங்களை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். சோதனையின் முடிவில் வரி ஏய்ப்பு மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட நகை பணம் குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பாம்பன் பாலத்தில் ராட்சத கிரேன் மோதி விபத்து - ரயில் போக்குவரத்து பாதிப்பு