மதுரை ரயில் நிலையத்தில் செயல்படும் உணவகங்களுக்கு தண்ணீர் கேன் இறக்குவதற்காக சென்னையிலிருந்து நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பூபதி என்பவருக்கு சொந்தமான லாரி வந்துள்ளது.
இதில் நள்ளிரவு லாரியில் இருந்த லோடை இறக்கி வைத்துவிட்டு ஓட்டுநர் அயர்ந்து உறங்கி உள்ளார். காலை லாரியில் ஏறி பார்த்த போது மர்மமான பார்சல் ஒன்று கிடந்துள்ளது. அதனை திறந்து பார்த்தபோது கட்டுக் கட்டாக கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து இதுகுறித்து திலகர் திடல் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், பார்சலை பிரித்து ஆய்வு செய்த போது சுமார் ஏழு லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த காவல் துறையினர், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பணத்தை வீசிச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். மதுரை ரயில் நிலைய வாசலில் கட்டுக்கட்டாக கள்ளநோட்டு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க... மண்ணை உண்டு வாழும் அதிசயப் பாட்டி!