ETV Bharat / jagte-raho

கோவையில் பட்டப்பகலில் வங்கி முன்பு வியாபாரியிடம் இரண்டரை லட்சம் கொள்ளை! - pollachi money theft news

கோவை: பட்டப்பகலில் வங்கி முன்பாக வியாபாரியிடமிருந்து இரண்டரை லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

கோவையில் பட்டப்பகலில் வங்கி முன்பு வியாபாரியிடம் 3 லட்சம் கொள்ளை!

author img

By

Published : Dec 23, 2020, 2:37 PM IST

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 50), பஞ்சு வியாபாரி. இவர், தனது மொபட்டில் பொள்ளாச்சி நியூ ஸ்கீம் ரோடு வந்தார்.

பின்னர் அங்குள்ள தனியார் வங்கியில் வியாபாரத்திற்காக ரூபாய் இரண்டரை லட்சம் பணத்தை எடுத்து கொண்டு, தனது மொபட்டில் சீட்டுக்கு அடியில் வைத்தார்.

பின்னர் அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றபோது அவரை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள், அங்கு வந்து மொபட்டின் சீட்டை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர்.

இந்நிலையில், டீ குடித்து திரும்பி பார்த்தபோது, பாலகிருஷ்ணனின் மொபட் சீட் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ந்துள்ளார். திறந்து பார்த்தபோது அதில் இருந்த பணம் ரூபாய் இரண்டரை லட்சம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இது குறித்து மகாலிங்கபுரம் காவல் துறையில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, பணத்தை திருடி சென்ற அடையாளம் தெரியாத நபர்களை தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க...புறநகர் மின்சார ரயிலில் இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.