சென்னை கே.கே நகர் திருவள்ளுவர் காலனி 10ஆவது செக்டர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை பதுக்கிவைத்து விற்பனை செய்துவருவதாக தி.நகர் துணை ஆணையரின் தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த தனிப்படை காவல் துறையினர், ஷாகுல் ஹமீது என்பவரது வீட்டை சோதனைசெய்தனர். அப்போது சட்டவிரோதமாக வீட்டில் குட்காவை பதுக்கிவைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து தடை செய்யப்பட்ட குட்காவை விற்றதாக ஷாகுல் ஹமீது (32) என்பவரை கே.கே நகர் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
மேலும், அவர் வீட்டில் பதுக்கிவைத்திருந்த 97 கிலோ அளவிலான குட்காவை காவல் துறையினர் பறிமுதல்செய்து ஷாகுல் ஹமீதிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ராணிப்பேட்டையில் இளைஞரைக் கொலை செய்தவர்களின் சிசிடிவி காட்சி சிக்கியது!