ETV Bharat / jagte-raho

நீதிமன்ற ஊழியரை தீர்த்துக்கட்ட நினைத்த கணவன்! - kanyakumari viral video

குளச்சல் அருகே நீதிமன்ற பெண் ஊழியரை கணவனே நாற்காலியில் கட்டி வைத்து சித்திரவதை செய்து, அரிவாளால் வெட்டி கொடூரமாகப் பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த காணொலி பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Husband torchers wife
Husband torchers wife
author img

By

Published : Sep 19, 2020, 7:21 PM IST

Updated : Sep 19, 2020, 7:55 PM IST

கன்னியாகுமரி: நீதிமன்ற ஊழியரை கட்டி வைத்து தாக்கி கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட கணவனை காவல் துறையினர் கைது செய்தனர்.

குமரி மாவட்டம், குளச்சல் அருகேச் சேர்ந்தவர் சுரேஷ் ராஜன் (53). இவரது மனைவி ஹெப்சிபாய் (40). இவர்களுக்குத் திருமணமாகி 15 ஆண்டுகளாகியும் இதுவரை குழந்தைகள் இல்லை. இதன் காரணமாக, ஹெப்ஸிபாயை அவரது கணவர் நீண்ட காலமாக துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்தநிலையில், ஹெப்சிபாய்க்கு அரசு பணி கிடைத்தது. இதையடுத்து, அவர் செப்டம்பர் 2ஆம் தேதி இரணியல் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். சம்பவத்தன்று சுரேஷ்ராஜன், தனது வீட்டின் கதவை பூட்டி வைத்து வீட்டிற்குள் ஹெப்சிபாயின் காலில் அரிவாளால் வெட்டி, நாற்காலியில் கை, வாயை கட்டி வைத்துள்ளார்.

மனைவியை கட்டி வைத்து கொலைவெறி தாக்குதல் நடத்திய கணவன்

தொடர்ந்து கொடூரமாக சித்திரவதை செய்து, பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் அவரது அலறல் சத்தம் கேட்கவே பக்கத்து வீட்டார் குளச்சல் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் வீட்டை உடைத்து சென்றபோது ஹெப்சிபாய் காலில் வெட்டு காயத்துடன் நாற்காலியில் கைகளும், வாயும் கட்டப்பட்டிருந்த நிலையில் கொடூர சித்ரவதைக்கு உள்ளாகி அழுது கொண்டிருந்தார்.

அவர் அருகில் சுரேஷ்ராஜன் கத்தியுடன் சித்திரவதை செய்து கொண்டிருந்தார். நீதிமன்ற ஊழியரை மீட்ட காவல் துறையினர், சுரேஷ்ராஜன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்ராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஹெப்சிபாய் நாற்காலியில் கட்டப்பட்டு கொடூர சித்திரவதைக்கு உள்ளான காணொலிப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

Last Updated : Sep 19, 2020, 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.