ஈரோட்டைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், “கோகுல்ராஜ் என்பவர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, அவரது தாய் சித்ரா அளித்த புகாரின் பேரில் என் மீதும், யுவராஜ் உட்பட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 2015 அக்டோபரில் 1இல் கீழமை நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அந்த ஜாமீன் 2018 ஜூன் 2ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.
நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, பின்னர் மதுரை வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனு கடந்த ஜூன் 26இல் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆகவே, அதனை ரத்து செய்து எனக்கு இந்த வழக்கில் ஜாமின் வழங்க வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் சந்திரசேகர், பிரபு, கிரிதரன், சுரேஷ் ஆகியோர் ஜாமீன் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:
இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் மின்கம்பத்தில் மோதி உயிரிழப்பு! - ஈரோட்டில் சோகம்