துபாயிலிருந்து இன்று (டிச. 18) அதிகாலை இரண்டு விமானங்கள் சென்னை சர்வதேச விமான முனையத்துக்கு வந்தடைந்தன. இதையடுத்து அந்த விமானத்தில் பயணித்து வந்த பயணிகளிடம் சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல் வாசித் (34), சகுபர் சாதீக்(37), சென்னையை சோ்ந்த ராவூத்தர் (44) ஆகிய 3 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர்.
அவர்களின் உள்ளாடை மற்றும் பேண்ட் பாக்கெட்டில் தங்க கட்டிகள், தங்கப்பசை உருளைகள் மறைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
பின்னர் அவர்களிடமிருந்து ரூ. 49.6 லட்சம் மதிப்புடைய 972 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கடத்தப்பட்ட 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்தூண்கள் சென்னையில் விற்பனை: போலீசார் விசாரணை!