புதுக்கோட்டை அடுத்துள்ள புதுப்பட்டியில் அரசு ஆசிரியாக பணியாற்றி வருபவர் வீரபாபு. இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த அரிமளம் சத்திரம் ஆகும். இவர் தனது ஊரில் அப்பா நாடராஜனை மட்டும் வீட்டில் விட்டுச் செல்வது வழக்கம்.
இதனையறிந்த திருடர்கள் வீட்டில் தனியாக இருந்த நடராஜனை படுக்கறையில் பூட்டி விட்டு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி மற்றும் தங்கம் 5ஆயிரம் பணம் போன்றவற்றை திருடி எடுத்துச் சென்றனர். திருடர்களின் சத்தம் கேட்டு எழுந்த நடராஜன், அறை திறக்க முயன்றுள்ளார். அப்போது அறை வெளிபக்கமாக பூட்டியிருந்தை கண்டு அதிர்ச்சியுற்று பின் சத்தம் கொடுத்தார். நடராஜனின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து வீட்டை திறந்து பார்த்தனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு தங்கம், வெள்ளி, பணம் போன்ற பொருட்கள் திருடு போனது தெரிய வந்தது.
இது குறித்து நடராஜன் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டினுள் ஆள் இருக்கும் போதே அவரை அறையில் பூட்டி விட்டு திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.