ETV Bharat / jagte-raho

தாய்க்கு தெரியாமல் விற்கப்பட்ட பெண் குழந்தை - பெங்களூரு சென்று குழந்தையை மீட்ட தனிப்படை! - girl child sold by father

சேலத்தில் பிறந்த 15 நாளிலேயே பெற்ற தந்தையால் ரூ. 1.15 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை காவல்துறையினர் மீட்டனர்.

girl child sold by father
தந்தையால் விற்கப்பட்ட பெண் குழந்தை
author img

By

Published : Dec 28, 2020, 10:14 PM IST

சேலம்: பிறந்த குழந்தையை விற்பனை செய்த வழக்கில் ஈடுபட்ட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நெத்திமேடு கரியபெருமாள் கரடு தெற்கு பகுதி காந்தி நகரை சேர்ந்த தம்பதி விஜய் (32), சத்யா (25). இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 1ஆம் தேதி சத்யாவுக்கு, மேச்சேரி அரசு மருத்துவமனையில் மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் அக்குழந்தையை அவரது வீடு அருகே உள்ள வெங்கடேஷ் மனைவி கோமதி (34) என்பவரிடம் கடந்த நவம்பர் 15 ம் தேதியன்று ரூ 1.15 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.

இது அந்தக் குழந்தையின் தாய்க்கு தெரியாது. இதனையடுத்து குழந்தையை காணாமல் துடித்த தாய் சத்யா நவம்பர் மாதம் 17ஆம் தேதி அளித்த புகாரின்படி, அன்னதானப்பட்டி காவல்துறையினர் கோமதியை பிடித்து விசாரித்துள்ளனர்.

அதில் ஈரோட்டை சேர்ந்த சித்ரா மற்றும் நிஷா(40) என்பவரிடம் பெண் குழந்தையை விற்றது தெரிந்தது. இதையடுத்து நிஷாவிடம் நடத்திய விசாரணையில், குழந்தை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த பாலாமணி என்பவர் மூலம், குழந்தையை விற்றதாகவும் பாலாமணி என்பவர் பெண் குழந்தையை, கர்நாடக மாநிலம் பெங்களூரு எடுத்துச்சென்று அங்கு ராஜேஸ்வரி என்பவருக்கு கூடுதல் விலைக்கு விற்றதாகவும் தெரியவந்தது.

இதனையடுத்து, குழந்தையை மீட்பதற்காக சேலம் மாநகர காவல்துறை சார்பில் அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் முரளி தலைமையில் தனிப்படை அமைத்து குழந்தையை மீட்க சென்றுள்ளனர்.

இதுகுறித்து ராஜேஸ்வரியிடம் விசாரணை மேற்கொண்டபோது ராஜேஸ்வரி அதே பகுதியில் சேர்ந்த மரிய கீதா என்பவருக்கு கூடுதல் விலைக்கு விற்று உள்ளது தெரியவந்தது.

இதையடுத்து மரிய கீதா என்பவர் அந்த குழந்தையை தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியை சேர்ந்த சுந்தரராஜன், சுஜிதா தம்பதிக்கு நான்கு லட்சத்திற்கு விற்றுள்ளது தெரியவந்தது.

பொம்மிடி பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் சுஜாதா தம்பதியினரிடம் குழந்தையை அன்னதானமப் பட்டி காவல்துறையினர் மீட்டுள்ளனர். பின்னர் விசாரணை நடத்தியதில், சுந்தரராஜன் தம்பதியருக்கு 16 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தினால் குழந்தையை வாங்கியது தெரியவந்தது.

இந்த நிலையில் குழந்தை விற்பனை தொடர்பாக ஏற்கனவே சேலத்தைச் சேர்ந்த கோமதி மற்றும் ஈரோடு பகுதியைச் சேர்ந்த நிஷா ஆகிய இருவரும் கடந்த டிசம்பர் 11ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், குழந்தை விற்பனை தொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்த மரிய கீதா, ராஜேஸ்வரி, குழந்தையை நான்கு லட்ச ரூபாய் கொடுத்து வாங்கிய சுந்தரராஜன் ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் இன்று(டிச.28) கைது செய்தனர்.
மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள குழந்தையின் தந்தை விஜய் பாலாமணி, சித்ரா ஆகியோர்களை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 58 நாள்களுக்குப் பிறகு குழந்தையை மீட்ட காவல்துறையினர் பராமரிப்பு காரணமாக அவரது தாய் சத்யாவிடம் தற்காலிகமாக குழந்தையை ஒப்படைத்துள்ளனர்.

தொடர்ந்து குழந்தையின் பிறப்பு மற்றும் உறவினர் குறித்தும் அறிவியல் ரீதியான விசாரணை மேற்கொண்டு குழந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுமிகளைக் கடத்திய அதிமுக பிரமுகரின் மகன் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.