புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாலத்தின்கீழ் பகுதியில் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்துகிடப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன், காவல் ஆய்வாளர் கருணாகரன் உள்ளிட்டோர் இறந்த முதியவரின் உடலைக் கைப்பற்றி பொன்னமராவதி வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
பின்னர் காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் நேற்று முன்தினம் (டிச. 04) மாலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள பாலக்கட்டையில் மதுபோதையில் அமர்ந்து இருந்ததாகவும், பாலக்கட்டையிலிருந்து தடுமாறி மதுபோதையில் கீழே விழுந்து காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து இறந்த நபரின் அடையாளம் காணும் வகையில் அவரின் புகைப்படத்தை வெளியிட்டு பொன்னமராவதி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ஒருதலைபட்சமாகச் செயல்படும் உதவி ஆய்வாளர்: மூவர் தீக்குளிக்க முயற்சி!