ETV Bharat / jagte-raho

போதை தலைக்கேறி பேருந்தை மறித்த ஆசாமி! - சென்னை மாநகரப் பேருந்து

சென்னை: குடிபோதையில் மாநகரப் பேருந்தை வழிமறித்து அலம்பல் செய்த போதை ஆசாமியை காவல்துறையினர் கைது செய்தனர்.

man
man
author img

By

Published : Nov 19, 2020, 12:13 PM IST

தாம்பரம் பணிமனையிலிருந்து பிராட்வே நோக்கி மாநகரப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்த நபர், சாலையில் படுத்து உருண்டு பின்னர் ஓடிப்போய் அப்பேருந்தை இரண்டு கைகளாலும் தடுத்தார். உடனே ஓட்டுநர் பேருந்தை நடுரோட்டிலேயே நிறுத்தினார். போதை நபர் பேருந்து ஓட்டுநரிடம் சென்று வாக்குவாதம் செய்தார்.

நிகழ்வறிந்து அங்கு வந்த குரோம்பேட்டை காவல்துறையினர், அந்த நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரித்ததில் அவர் நாகல்கேணி பகுதியைச் சேர்ந்த போஸ்டர் வெங்கட் என்பது தெரிய வந்தது.

போதை தலைக்கேறி பேருந்தை மறித்த ஆசாமி!

மாநகரப் பேருந்தை குடிபோதையில் வெங்கட் வழிமறித்து அட்டகாசம் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: செளகார்பேட்டை மூவர் கொலை வழக்கு: சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்கள் அதனால் சுட்டு கொலை செய்தோம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.