ETV Bharat / jagte-raho

குடிபோதையில் பீர் பாட்டிலால் இளைஞரை குத்திக் கொலை செய்த 6 பேர் தலைமறைவு! - ரஞ்சித்

சென்னை: கோயம்பேட்டில் குடிபோதையில் இளைஞரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய ஆறு பேரை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்

POLICE
author img

By

Published : Aug 4, 2019, 3:12 PM IST

சென்னை அருகே உள்ள நெற்குன்றம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சித் (22). இவரை அடையாளம் தெரியாத நபர்கள் கல்லால் அடித்தும், பீர் பாட்டிலால் சரமாரியாக குத்தியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து கோயம்பேடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

DRUNK AND MUDER  6 FRIENDS  POLICE LOOKING FOR MUDERES  6 பேர் தலைமறைவு
கொலைசெய்யப்பட்ட ரஞ்சித்

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கோயம்பேடு காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் குறித்து கோயம்பேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், 'ரஞ்சித் அவருடைய நண்பர்கள் மாடா விக்கி, பேட்டை சுரேஷ், பலாக்கொட்டை கார்த்தி, மண்ட தினேஷ், ஹரிஹரசுதன், இஸ்ரேல் ஆகிய ஆறு பேருடன் சேர்ந்து நேற்று இரவு மது அருந்தியுள்ளார்.

அப்போது குடிபோதையிலிருந்த ரஞ்சித்தை அவரது நண்பர்கள் கல்லால் அடித்தும் பீர் பாட்டிலால் சரமாரியாக குத்தியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது' தெரியவந்தது. ரஞ்சித்தை கொலை செய்த அவரது நண்பர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ரஞ்சித் மீது 2018ஆம் ஆண்டு அன்பழகன் என்ற காவலரை ஓடஓட அரிவாளால் வெட்டியது, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் பூந்தமல்லி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 04.08.19

சென்னை கோயம்பேட்டில் குடிபோதையில் பீர் பாட்டிலால் வாலிபரை சரமாரியாக குத்தி கொலை செய்த 6 பேர் தலைமறைவு..

சென்னை நெற்குன்றம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்(22) இவரும் இவருடைய நண்பர்கள் மாடாவிக்கி , பேட்டை சுரேஷ் , பலாக்கொட்டை கார்த்தி , மண்ட தினேஷ் , அரிஹரசுதன் , இஸ்ரேல் ஆகியோருடன் சேர்ந்து நேற்று இரவு மதுகுடித்து உள்ளனர். இதன் பின்பு குடிபோதையில் இருந்த ரஞ்சித்தை கல்லால் அடித்து பீர் பாட்டிலால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.சம்பவ இடத்துக்கு வந்த கோயம்பேடு போலீஸார் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து ரஞ்சித்தை கொலை செய்த மாடா விக்கி ,பேட்டை சுரேஷ் ,பலாக்கொட்டை கார்த்தி , மண்ட தினேஷ் , அரிஹரசுதன் , இஸ்ரரேல் உள்ளிட்டோருக்கு கோயம்பேடு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட ரஞ்சித் கடந்த ஆண்டு 2018ஆம் ஆண்டு அன்பழகன் என்ற காவலரை ஒடஒட அரிவாளால் வெட்டியவர். இவர் மீது பூந்தமல்லி காவல் நிலையத்தில் கொலை முயற்சி , மற்றும் அடிதடி ,போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. மேலும் இது போல் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட்டில் பெண் கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபர் யார் என்று அடையாளம் தெரிந்தும் இதுவரை இந்த வழக்கு சம்பந்தமாக குற்றவாளியை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

tn_che_01_murder_accused_upsconted_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.