ETV Bharat / jagte-raho

பெண்ணின் கவனத்தை திசை திருப்பி நூதனமாக 1 லட்சம் ரூபாய் கொள்ளை! - செங்கல்பட்டு குற்றச் செய்திகள்

பத்து ரூபாய் கீழே கிடப்பதாக சொல்லி பெண்ணின் கவனத்தை திசை திருப்பி, அவரிடமிருந்த ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை பறித்து சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

பெண்ணின் கவனத்தை திசை திருப்பி 1 லட்சம் ரூபாய் கொள்ளை

author img

By

Published : Jan 23, 2021, 3:33 PM IST

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில், வன்னியர் நகரைச் சேர்ந்தவர், தனலட்சுமி. இவர் சிங்கபெருமாள்கோவிலில் உள்ள, தமிழ்நாடு அரசின் கூட்டுறவு வங்கியில் நகைகளை அடகு வைத்து 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.

நகைக் கடனாக பெற்ற பணத்துடன் வீட்டிற்கு செல்வதற்காக, தனது இருசக்ர வாகனத்தை எடுக்க சென்றபோது, அவர் அருகே வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பத்து ரூபாய் கீழே கிடப்பதாக கூறி தனலட்சுமியின் கவனத்தை திசை திருப்பியுள்ளனர். கீழே கிடந்த ரூபாயை எடுக்க தனலட்சுமி முயற்சித்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் அவரிடமிருந்த, 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர்.

இது குறித்து தனலட்சுமி மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் மறைமலை நகர் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தோல்வி - இளைஞர் தற்கொலை முயற்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.