திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள விருவீடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வாடகை பாத்திரக்கடை நடத்திவந்தார். இவருக்கும் அதே ஊரில் சத்துணவு அமைப்பாளராகப் பணிபுரிந்துவரும் சுதா என்பவருக்கும் பழக்கம் இருந்தநிலையில் சுதா பிரிந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால், கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு பிரச்னை முற்றிய நிலையில், விருவீடு காவல் துறையினர் சமரசம் செய்து வைத்தனர். இந்நிலையில், மணிகண்டன் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், உடற்கூறாய்வு செய்யப்பட்ட மணிகண்டன் உடலை ஏற்றிக்கொண்டு விருவீடு சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீது மணிகண்டனின் உறவினர் கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், இதைக் கொலை வழக்காகப் பதிவுசெய்ய வேண்டுமெனவும் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தனர்.
இதையும் படிங்க: மொட்டை மாடியில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட போலி சாமியார் கைது