சென்னை கிண்டி அடுத்துள்ள ஆதம்பாக்கம் கணேஷ்நகரைச் சேர்ந்தவர் சரவணன் (52). இவர் பெரம்பூர் கருவூலத்தில் உதவியாளராக பணியாற்றி வருகின்றனர். இவரது மனைவி சரஸ்வதி(48). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சரவணன் அவரது தாய் சுலோச்சனா (77) குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
சரவணனின் மனைவி கடந்த சில ஆண்டுகளாக மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சரவணன் வேலைக்குச் சென்று விட்டு, தனது மகனுடன் வீட்டிற்கு வந்தபோது கதவு உள்புறமாக மூடி இருந்தது. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஹாலில் சரஸ்வதி அமர்ந்து இருந்தார்.
உள் அறையில் சுலோச்சனா இடது கண் புருவம், நெற்றி ஆகியப் பகுதிகளில் காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்தார். உடனே அவரை பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுலோச்சனா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும் இது பற்றி ஆதம்பாக்கம் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சுலோச்சனா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் சுலோச்சனாவுக்கும், சரஸ்வதிக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், இதில் ஆத்திரமடைந்த சரஸ்வதி சமையலறையிலிருந்த கத்தியால் அவரைத் தாக்கியதாகவும் தெரியவருகிறது.
இதனையடுத்து சரஸ்வதியை கைது செய்த காவல் துறையினர் விசாரணைக்காக, ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். குடும்பப் பிரச்ணை காரணமாக மருமகளே மாமியாரைக் கொலைசெய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:அதிவேகமாக பாலத்தில் பயணித்து கீழே விழுந்த கார்: ஒருவர் உயிரிழப்பு