ETV Bharat / jagte-raho

தூக்கில் தொங்கிய கூலித் தொழிலாளி - சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை! - பெரம்பலூர் சுந்தர பாண்டியன் தற்கொலை

தனியாக இருந்த கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்வத்தைத் தொடர்ந்து, இறப்புக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

daily wages labour hanged in perambalur
daily wages labour hanged in perambalur
author img

By

Published : Sep 28, 2020, 4:40 PM IST

பெரம்பலூர்: மனைவியை இழந்து வீட்டில் தனியாக இருந்த கூலித் தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பெரம்பலூர் நகர்ப்புற பகுதி துறைமங்கலம் ஒளவையார் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர பாண்டியன். கூலி வேலை செய்துவரும் சுந்தரபாண்டியனின் மனைவி கண்ணகி, சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், இவரது இரண்டு மகள்களில் ஒருவருக்கு திருமணமாகியும், மற்றொருவர் தாய் மாமன் வீட்டில் வசித்துவருகிறார்.

சுந்தர பாண்டியன் மட்டும் தனியாக வசித்துவந்த நிலையில், இன்று (செப். 28) தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரம்பலூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இறந்த சுந்தர பாண்டியனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காகப் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.