ETV Bharat / jagte-raho

குற்றப் பதிவேட்டில் 59 பேர் நீக்கம் - எஸ்பி கண்ணன் உத்தரவு! - செங்கல்பட்டு மாவட்டம் செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நீண்ட காலமாக குற்றப் பதிவேட்டிலிருந்த 59 நபர்களின் பெயரை நீக்க எஸ்பி கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

எஸ்பி கண்ணன்
SP Kannan
author img

By

Published : Dec 29, 2020, 5:36 PM IST

செங்கல்பட்டு: நீண்ட காலமாக குற்றப் பதிவேட்டில் இருந்த சுமார் 190 நபர்களை இன்று(டிச.29) செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார்.

மாவட்டம் முழுதும் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்த விவரம், குற்றப் பதிவேடாகப் பராமரிக்கப்படுவது வாடிக்கை.
அப்பதிவேட்டில் உள்ள நபர்கள் தொடர்ந்து காவல் துறையின் கண்காணிப்பிலேயே இருந்து வருவர்.

மேலும், குற்றங்கள் நடைபெறும் போது, இந்தப் பதிவேட்டில் இருப்பவர்களை அது சம்பந்தமாக அழைத்து விசாரணையில் ஈடுபடுவதும் உண்டு. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நீண்ட காலமாக குற்றப் பதிவேட்டில் இருந்த சுமார் 190 நபர்களை இன்று(டிச.29) செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து, அனைத்து காவல் நிலைய அலுவலர்களையும் அழைத்து, சம்பந்தப்பட்ட நபர்களின் தற்போதைய நடவடிக்கைகளைப் பற்றி கேட்டறிந்தார். குற்றப் பதிவேட்டில் உள்ளவர்கள் மீது தற்போதுள்ள வழக்குகள், புதிய குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனரா, வழக்கின் போக்கு ஆகியவை குறித்து விசாரித்தார்.

இதில், 59 நபர்கள் தற்போது எந்தவிதமான குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல் அமைதியாக வாழ்ந்து வருவது தெரிய வந்தது. இதனையடுத்து, நன்னடத்தை காரணமாக அந்த, 59 நபர்கள் மீதான குற்றப் பதிவேட்டை நீக்க பரிந்துரை செய்யுமாறு, சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்வில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராமு, செங்கல்பட்டு உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சாப்பிட்ட பானிபூரிக்கு பணம் கேட்ட கடைக்காரருக்கு நேர்ந்த விபரீதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.