கடந்த 2013ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது 13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியை சிலர் ஆன்லைனில் பார்ப்பதால், அதிகளவில் ஆன்லைன் மூலம் சூதாட்டம் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்த வகையில், ஹைதராபாத்தில் ஒரு கும்பல் பெட் பஷீராபாத்தில் எஸ்ஓடி (SOT) பாலநகர் மண்டலம் கிரிக்கெட் குழு சட்டவிரோதமாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது. அதன்படி அக்.4ஆம் தேதி சைபராபாத் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், பெட் பஷீராபாத் அருகில் கிரிக்கெட் பந்தயம் தொடர்பாக ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது தெரியவந்தது.
கூகுள் பே (google pay) , போன் பே (phonepe) மூலம் 22 லட்சத்து 89 ஆயிரத்து 400 ரூபாய் ரொக்கம், வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 13 லட்சம் ரூபாயும், எட்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆன்லைன் சூதாட்டம் நடக்கும் முறை
ஆர்வமுள்ள நபர்களுக்கு மொபைல் எண்கள் மூலம் பந்தயம் குறித்த விவரங்களை சூதாட்ட நபருக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த நபர் குறைந்தபட்சம் 50ஆயிரம் ரூபாய்க்கு தனக்கு பிடித்த அணிகளை தேர்ந்தெடுப்பார்.
இதில், தனக்கு ஏற்றார்போல் கிரிக்கெட் ஆடும் நபரை மாற்றிக்கொள்ளலாம். உள்ளூரில் இருந்துகொண்டே வெளியூர் நபருக்கும் பந்தய ஆட்ட நபரை சேர்த்துக்கொள்ளலாம். பணப்பரிமாற்றம் ஹைதராபாத்தில் நடைபெறும்போது கோவாவில் நடைபெறுவதுபோல் ஆன்லைனில் காட்டும் அளவிற்கு நூதனமான முறையில் இந்த சூதாட்டம் நடைபெற்றுள்ளது.
பணப்பரிமாற்றம் பெரும்பாலும் இணைய வங்கி, ஃபோன்பே (phonepe), கூகுள் பே (google pay) மூலம் செய்யப்படுகிறது. இந்த ஆன்லைன் சூதாட்டத்தில் தொடர்புடைய கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 21 சதவிகிதமாக உயர்த்துக! - ரவிகுமார் எம்.பி