ETV Bharat / jagte-raho

'இனி சாராயம் கடத்துவ...' - அலேக்காக கைது செய்த போலீசார் - Counterfeit liquor smuggler arrested in Viluppuram

புதுச்சேரியில் இருந்து தொடர்ந்து கள்ளச்சாராய கடத்தலில் ஈடுபட்டு வந்த நபரை காவல் துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

'இனி சாராயம கடத்துவ...' - அலேக்காக கைது செய்த போலீசார்

author img

By

Published : Nov 9, 2020, 8:23 AM IST

Updated : Nov 9, 2020, 10:01 AM IST

புதுச்சேரி மாநிலம், ஆண்டியார்பாளையத்தில் வசித்து வருபவர், நொள்ள கார்த்திக் (எ) ஞானபிரகாசம். இவர் புதுச்சேரி மாநிலத்திலிருந்து, தமிழ்நாடு எல்லைக்குள் கள்ளச்சாராயம் கடத்துவதையே தொழிலாக கொண்டுள்ளார்.

இதனால் இவர் மீது பலமுறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து எச்சரித்துள்ளனர். ஆனால், வழக்குகளைக் கண்டு அஞ்சாத இவர், தொடர்ந்து கள்ளச்சாராயம் கடத்துவதில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் சிறப்பாக பணியாற்றிய ஐவருக்கு விருது!

இவரது செயலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ், கைது செய்ய அனுமதி வழங்குமாறு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு, அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் பரிந்துரை செய்துள்ளார்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டதின்பேரில், தற்போது காவல் துறையினர் இவரைக் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Last Updated : Nov 9, 2020, 10:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.