ETV Bharat / jagte-raho

சொத்துத்தகராறு - கிணற்றில் வீசி குழந்தை படுகொலை! - கிணற்றில் வீசி குழந்தை படுகொலை

ராணிப்பேட்டை: சொத்துத்தகராறு காரணமாக குழந்தையின் பெரியம்மாவே கிணற்றில் வீசி கொலை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder
murder
author img

By

Published : Dec 2, 2020, 2:17 PM IST

ராணிப்பேட்டையை அடுத்த செட்டிதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி. கட்டடத் தொழிலாளரான இவருக்கு தனுசு, கோபிகா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று பகல் நேரத்தில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கோபிகா வெகுநேரம் ஆகியும் காணாததால் பெற்றோர் பதறினர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை குழந்தையின் பெற்றோர் ஆய்வு செய்தனர். அதில் சுமார் 1.30 மணியளவில் சிறுமியை ஒரு பெண் தூக்கிச் செல்வதும், பின்பு சில நிமிடங்கள் கழித்து அப்பெண் மட்டும் திரும்பி வருவதும் பதிவாகியிருந்தது.

இது குறித்து ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரிக்க தொடங்கினர். விசாரணையில் திடுக்கிடும் திருப்பமாக, கோபிகாவை தூக்கிச் சென்றது காந்தியின் அண்ணன் மனைவியான ராணி(36) என்பது தெரியவந்தது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், ஒன்றும் தெரியாதது போல் நடித்த ராணியிடம், சிசிடிவி காட்சிகளை காட்டி தொடர்ந்து விசாரித்ததில், சொத்து தகராறு காரணமாக, தான் தான் குழந்தையை தூக்கிச் சென்று கிணற்றில் வீசியதாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, பல மணி நேரம் கிணற்றுக்குள் இறங்கி தீயணைப்புத்துறையினர் போராடியும் தண்ணீர் அதிகம் இருந்ததால் குழந்தையை மீட்க முடியவில்லை. பின்னர் மோட்டரை கொண்டு கிணற்றிலிருந்து நீரை வெளியேற்றி, 7 மணி நேரத்திற்கு பின்னர் கிணற்றில் சிக்கியிருந்த குழந்தையின் உடலை வீரர்கள் மீட்டனர். கூராய்விற்காக குழந்தையின் உடல் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் குழந்தையை கொலை செய்த ராணியை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு: மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.