ETV Bharat / jagte-raho

தலைமை மருத்துவர் வீட்டில் 197 சவரன் நகைகள், 6 லட்சம் பணம் கொள்ளை! - ஊத்தங்கரை

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரையில் தலைமை மருத்துவர் வீட்டின் கதவை உடைத்து 197 சவரன் நகைகள், 6 லட்சம் ரூபாய் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

doctor
author img

By

Published : Aug 22, 2019, 2:15 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரிந்துவருபவர் மாரிமுத்து. இவர் நேற்று காலை 9 மணியளவில் சொந்த வேலை காரணமாக குடும்பத்துடன் சென்னைக்கு சென்றுவிட்டு இரவு 12 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடனடியாக ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

JEWEL THEFT  197 savaran and 6 lakh theft in doctor's house  கிருஷ்ணகிரி  மருத்துவர் வீட்டில் 197 சவரன் நகை கொள்ளை
காவல் துறையினர் விசாரணை

தகவலையடுத்து விரைந்துவந்த காவல் துறையினர் வீட்டிற்குள் நுழைந்து பார்த்தபோது தனியறையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பீரோக்கள் உடைந்து காணப்பட்டன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 197 சவரன் நகை, 6 லட்சம் ரூபாய் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

JEWEL THEFT  197 savaran and 6 lakh theft in doctor's house  கிருஷ்ணகிரி  மருத்துவர் வீட்டில் 197 சவரன் நகை கொள்ளை
கொள்ளையடிக்கப்பட்ட மருத்துவர் வீடு

இதனைத் தொடர்ந்து, காவல் துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டியன் தலைமையில் கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தலைமை அரசு மருத்துவர் வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

197 சவரன் நகை, 6 லட்சம் பணம் கொள்ளை

வீட்டில் ஆள் இல்லாத நேரத்தை நோட்டமிட்டு திட்டம் தீட்டப்பட்டு இந்த திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தலைமை மருத்துவர் வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல், ஊத்தங்கரை பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக பாம்பனில் ஒரு வீட்டின் கதவை உடைத்து சுமார் 150 பவுன் திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அரசு தலைமை மருத்துவர் வீட்டில் 300 சவரன் நகை மற்றும் 6 லட்சம் பணம் கொள்ளை
Body:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு தலைமை மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரியும் மருத்துவர் மாரிமுத்து என்பவர் வீட்டில் நள்ளிரவு புகுந்த கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து 300 பவுன் தங்க நகைகள் மற்றும் 6 லட்ச ரூபாய் பணம் உள்ளிட்டவர்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை 9 மணி அளவில் சொந்த வேலையின் காரணமாக குடும்பத்துடன் சென்னை சென்றிருந்த நிலையில் இரவு 12 மணி அளவில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்த நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டிற்குள் நுழைந்து பார்த்தபோது தனிஅறையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பீரோக்களையும் உடைத்துள்ளனர்.
அதில் வைக்கப்பட்டிருந்த 300 பவுன் நகை மற்றும் 6 லட்ச ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு ஊத்தங்கரை காவல் துணைகண்காணிப்பாளர் ராஜபாண்டியன் தலைமையிலான குழுவினர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊத்தங்கரை பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக பாம்பணையில் இதேபோல் வீட்டை உடைத்து சுமார் 150 பவுன் திருடிச் சென்ற நிலையில் தற்போது மீண்டும் ஊத்தகரை பகுதியில் அதிகபட்சமாக 300 பவுன் மற்றும் 6 லட்சம் அரசு தலைமை மருத்துவர் மாரிமுத்து வீட்டில் திருடு போனது குறித்து போலீசார் அதிர்ச்சியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமை அரசு மருத்துவர் வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலதிக தகவலாக தலைமை மருத்துவரின் மகள் மருத்துவம் பயின்றுவருகிறார்.மகன் இளநிலை மருத்துவராக பணியாற்றிவருகிறர்.சம்பவத்தன்று மகனும் தந்தையும் பணி தொடர்பாக சென்னை அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.மருத்துவரின் மனைவி சொந்தக்காரர் வீட்டிற்கு சென்டிருக்கிறார்.ஆள் இல்லாத நேரத்தை நோட்டமிட்டு திட்டம் தீட்டி திருட்டு நடந்ததுள்ளது தெரியவருகின்றது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வழக்கு பதிவில் 197 சவரன் நகை மட்டுமே கணக்கு காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.