ETV Bharat / jagte-raho

பெண்ணுக்கு கல்தா கொடுத்த காதலன் - தொடரும் தர்ணா போராட்டம்! - காதலித்து பெண் ஏமாற்றம்

நைனார் முகமது என்னை காதலித்து ஏமாற்றி விட்டார். அதிகார பலத்தை வைத்துகொண்டு என்னை ஏமாற்றுகின்றனர். நான் ஒரு ஏழைப் பெண். காவல் துறையினர் நைனார் முகமதுடன் என்னை திருமணம் செய்து வைக்க வேண்டும்; இல்லையென்றால் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காதலி தர்ணா.

chennai girl dharna in front of boyfriends house

author img

By

Published : Oct 16, 2020, 8:33 PM IST

சென்னை: காதலித்து ஏமாற்றிய காதலனுடன் தன்னை சேர்த்து வைக்க காதலி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த பட்டதாரி பெண், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் ஜமீன் பல்லாவரம் ஜவ்வாது உசேன் தெருவைச் சேர்ந்த நைனார் முகமது(29) என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளார். இவ்விருவரும் நட்பாக பழகி, நாளடைவில் காதலிக்கத் தொடங்கினர்.

தொடர்ந்து நெருக்கம் அதிகரிக்கவே, இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் குறித்து நைனார் முகமதுவின் தாய் ரபியாதுக்கு தெரியவந்துள்ளது. பின்னர் நைனார் முகமதுவை வேலைக்கு அனுப்பாமல் தாயார் வீட்டில் முடக்கியுள்ளார்.

இதையடுத்து நைனார் முகமது பத்து நாட்களாக வேலைக்கு வராததால், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பேசமுடியவில்லை எனத் தெரிகிறது. இதனால் அவரது வீட்டிற்குச் சென்ற காதலி, காதலன் குறித்து அவரது தாயிடம் கேட்டுள்ளார். அப்போது, தனது மகன் வீட்டில் இல்லை என்றும், அவர் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து மகனின் காதலியை தகாத வார்த்தையில் திட்டி, ‘இங்கே இனி அவனை தேடி நீ வரக்கூடாது’ என்று கூறி விரட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த காதலி, தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று, நைனார் முகமது தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக புகாரளித்துள்ளார். பின்னர் புகாரின் அடிப்படையில், நயினார் முகமதுவிடமும், அவரின் தாயாரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் காதலியிடம் இரண்டு நாளில் திருமணம் ஏற்பாடு செய்வதாகக் கூறி வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.

மனைவியின் தலையை வெட்டி காதலன் வீட்டில் வீசிய கணவர்!

ஆனால், இரண்டு நாட்கள் கழித்து காதலி, தாம்பரம் மகளிர் காவல் நிலையம் சென்று கேட்டபோது, நைனார் முகமது இன்னும் வரவில்லை வந்தவுடன் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி அனுப்பியுள்ளனர். இதையடுத்து நைனார் முகமது வீட்டிற்குச் சென்று கேட்டபோது, அவர் பின்பக்கக் கதவைத் திறந்து தப்பியோடியுள்ளார்.

இதைப் பார்த்து விரக்தியடைந்த காதலி, நயினார் முகமது வீட்டின் வாசலில் அமர்ந்து, அவருடன் திருமணம் செய்து வைக்க வேண்டும்; இல்லையென்றால் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்.

இதுகுறித்து காதலி கூறுகையில், “நைனார் முகமது என்னை காதலித்து ஏமாற்றி விட்டார். அவரின் தாய் தேமுதிக கட்சியின் மகளிர் அணி செயலாளராக இருப்பதால், அதிகார பலத்தை வைத்துகொண்டு என்னை ஏமாற்றுகின்றனர். நான் ஒரு ஏழைப் பெண். காவல் துறையினர் நைனார் முகமதுடன் என்னை திருமணம் செய்து வைக்க வேண்டும்; இல்லையென்றால் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காதலன் வீட்டில் தர்ணாவில் ஈடுப்பட்டு வரும் பெண்

இல்லை என்றால் என் இறப்பிற்கு காரணம் நைனார் முகமதும் அவரின் குடும்பத்தினரும்தான் என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன்” என தன் சோகத்தை செய்தியாளர்களிடம் வெளிப்படுத்தினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.