ETV Bharat / jagte-raho

சென்னையில் அரசுப் பேருந்து ஏறி வியாபாரி உடல் நசுங்கி உயிரிழப்பு: காணொலி வைரல் - சென்னையில் அரசு பேருந்து மோதி வியாபாரி பலி: வீடியோ வைரல்

சென்னை: வடபழனியில் மாநகரப் பேருந்து ஒன்று மோதி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

chennai corporation bus accident, one killed
author img

By

Published : Oct 14, 2019, 5:32 PM IST

சென்னை கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (52). இவர் மளிகை சாமான் வியாபாரம் செய்துவந்தார். இந்நிலையில் மகேந்திரன் இன்று மதியம் வடபழனியிலிருந்து அசோக் நகருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக வந்த மாநகரப் பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது சாலையின் வழி சிறியதாக இருப்பதைக்கண்டு மகேந்திரன் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

அப்போது, அவருக்குப் பின்னால் வந்த '570' எண் கொண்ட வடபழனி - கேளம்பாக்கம் செல்லக்கூடிய மாநகரப் பேருந்து உரசியதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த மகேந்திரன் மீது பேருந்தின் பின்சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அரசுப் பேருந்து ஏறி வியாபாரி உடல் நசுங்கி சாவு: வைரல் காணொலி

இது குறித்து பாண்டி பஜார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:சென்னை வடபழனியில் மாநகர பேருந்து மோதி வியாபாரி பலி.

வியாபாரி மகேந்திரன் (52) தனது இருசக்கர வாகனத்தில் அசோக் நகரை நோக்கி செல்லும் போது அவ்வழியே சென்ற மாநகர பேருந்தை முந்த முயன்ற போது பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலி.

இது குறித்து வடபழனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலிசார் விசாரணை.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.