ETV Bharat / jagte-raho

உணவு டெலிவரி போர்வையில் வழிப்பறி - இருவர் கைது! - வழிப்பறி கொள்ளையர்கள்

இரவு நேரங்களில் உணவு டெலிவரி செய்வதைப் போல் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் பெயரிடப்பட்ட பனியன் அணிந்துகொண்டு, தனியாக வரும் நபர்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டுவந்த இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

chennai chain snatchers arrested
chennai chain snatchers arrested
author img

By

Published : Oct 3, 2020, 1:27 AM IST

சென்னை: இரவு நேரங்களில் உணவு டெலிவரி செய்வதைப்போல் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

சென்னை அடையாறு மல்லிகைப்பூ நகர் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன். இவர் தனது நண்பர் ஆகாஷுடன் இருசக்கர வாகனத்தில் மகாபலிபுரம் சென்றுவிட்டு, அதிகாலை 3 மணியளவில் வீடு திரும்பிச் சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக துரைபாக்கம் சங்கீதா உணவகம் அருகே வாகனத்தில் பெட்ரோல் இல்லாத காரணத்தினால் வாகனம் நின்றுள்ளது.

அச்சமயத்தில், அங்கு வந்த ஸ்விக்கி உணவு டெலிவரி பனியன் அணிந்த ஒருவரும், ஃபோன் பே என அச்சிடப்பட்டிருந்த பனியன் அணிந்த மற்றொருவரும் நின்றிருந்த கங்காதரன், அவரது நண்பர் ஆகாஷ் ஆகியோருக்கு உதவி செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.

பின்னர் கங்காதரனின் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி தருவதாகக் கூறி ஒரு நபர் அவரது வண்டியை பெருங்குடி டோல் கேட் அருகே தள்ளிக் கொண்டு சென்றுள்ளார். மற்றொரு நபர் அவர் வரும்வரை கங்காதரன் உடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

திடீரென கங்காதருடன் இருந்த அந்த நபர் கங்காதரன், ஆகாஷை மிரட்டி கைப்பேசி உள்ளிட்டவற்றைப் பறித்துக்கொண்டு தப்ப முயலும்போது, அவ்வழியாக வந்த இரவு ரோந்துக் காவலர்கள், அவர்கள் இருவரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் கண்ணகி நகரைச் சேர்ந்த முருகவேல் (24), முரளி (27) எனத் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் இரவு நேரங்களில் உணவு டெலிவரி செய்வதைப் போல் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் பெயரிடப்பட்ட பனியன் அணிந்துகொண்டு தனியாக வரும் நபர்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டுவருவது தெரியவந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.