செங்கல்பட்டு மாவட்டம் களத்தூரைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு திருவள்ளூர் மாவட்டம் ஆயலூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகன் தருமன் (27) பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையடுத்து, இதுதொடர்பாக நேற்று பெண்ணின் தந்தை ஒரத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் ஒரத்தி காவல் துறையினர் சந்திரசேகரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.