ETV Bharat / jagte-raho

தொழிலதிபரிடம் 1 கோடியே 21 லட்சம் ரூபாய் மோசடி - இருவர் கைது!

சென்னை: குறைந்த வட்டியில் 25 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாக பெங்களூரு தொழிலதிபரிடம் மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு பேர் தலைமறைவாகியுள்ளனர்.

arrest
arrest
author img

By

Published : Jan 7, 2020, 4:18 PM IST

பெங்களூருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் லீவிஸ். இவர் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தொழிலை மேம்படுத்த 25 கோடி ரூபாய் தேவைப்பட்டதால் வேணு என்பவர் மூலம் சென்னை திருமங்கலத்தில் உள்ள, ஸ்ரீ சக்ரா அசோசியேட்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் சரவணன், கிருஷ்ணா அயூப், பாஸ்கர் மற்றும் கிரீன்பாக் ஆகியோரை அணுகியுள்ளார்.

தங்கள் நிறுவனத்தின் சான்றிதழை வைத்து குறைந்த வட்டியில் 25 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக அவர்கள் சந்தோஷிடம் கூறியுள்ளனர். மேலும், 25 கோடி ரூபாய் கடனுக்கு கமிஷனாக 1 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் அந்த நால்வரும் சந்தோஷிடம் கூறியுள்ளனர்.

தொழிலதிபரிடம் 1 கோடியே 21 லட்சம் மோசடி - இருவர் கைது

இதனடிப்படையில், 1 கோடியே 21 லட்சம் ரூபாய் வரை அவர்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் சந்தோஷ் செலுத்தியுள்ளார். பின்னர், நீண்ட நாட்களாகியும் அவர்கள் கடன் பெற்றுத்தராததால், தான் ஏமாந்தது தெரியவந்ததையடுத்து சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையிடம் சந்தோஷ் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மோசடியில் ஈடுபட்ட சரவணன், கிருஷ்ணா ஆகியோரை கைது செய்தனர். மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: செல்போன் திருடும் கும்பல் கைது!

Intro:Body:குறைந்த வட்டியில் 25கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக பெங்களூர் தொழிலதிபரை 1கோடியே 21லட்சம் ரூபாயை மோசடி செய்த 2 பேர் கைது.4 பேர் தலைமறைவு.

பெங்களூரு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் லீவிஸ்.இவர் பெங்களூர் பகுதியில் தனியாக கட்டுமான நிறுவனம் நடத்தி வருகின்றார். இவருக்கு தனது தொழிலை மேம்படுத்த சுமார் 25கோடி ரூபாய் தேவைப்பட்டுள்ளது.அப்போது வேணு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரின் மூலம் சென்னை திருமங்கலத்தில் ஸ்ரீ சக்ரா அசோசியேட்ஸ் நிறுவனம் வைத்துள்ள சரவணன்,தொழிலபதிபர் கிருஷ்ணா அயூப்,பாஸ்கர் மற்றும் கிரீன்பாக் ஆகிய நபர்கள் தங்கள் நிறுவனத்தின் சான்றிதழை வைத்து குறைந்த வட்டியில் 25 கோடி ரூபாய் வங்கி கடன் பெற்று தருவதாக சந்தோஷிடம் கூறியுள்ளனர்.மேலும் 25கோடி ரூபாய் கடன் பெற வேண்டும் என்றால் கமிஷனாக 1கோடி ரூபாய் வரை கொடுக்க வேண்டும் என்று 4 நபர்கள் சந்தோஷிடம் கூறியுள்ளனர்.இதன் அடிப்படையில் 1கோடியே 21 லட்சம் ரூபாய் வரை வங்கி கணக்கு மூலம் சந்தோஷ் செலுத்தி உள்ளார். பின்னர் நீண்ட நாட்களாக கடன் பெற்று தராததால் தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்ததையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் சந்தோஷ் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுப்பட்ட சரவணன்,கிருஷ்ணா ஆகியோரை கைது செய்தனர்.மேலும் இந்த மோசடியில் ஈடுப்பட்ட 4பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.