ஹைதராபாத்தைச் சேர்ந்த தோட்டா புருஷோத்தம் ராவ், இட்டா உபெந்தர் ராவ் ஆகிய் வருமானவரித் துறை ஆய்வாளர்கள் முறையே 30 ஆயிரம் ரூபாயும் 50 ஆயிரம் ரூபாயும் லஞ்சம் பெற்றுள்ளார்கள்.
இதுதொடர்பாக சிபிஐயிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் சிபிஐ அலுவலர்கள் இரு ஆய்வாளர்களையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அவர்களின் அலுவலங்கள், வீடுகள் ஆகிய இடங்களில் சோதனை செய்துவருகின்றனர்.