கொல்கத்தா: பல கோடி சிட் நிதி மோசடி தொடர்பாக ரோஸ் வேலி குழுமத்தின் தலைவர் கௌதம் குண்டுவின் மனைவி சுப்ரா குண்டுவை மத்திய புலனாய்வுத் துறை அலுவலர்கள் வெள்ளிக்கிழமை கைது செய்ததாக சிபிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சுப்ரா குண்டு மீது போன்ஸி (சிட் பண்ட்) ஊழலில் ஈடுபட்டதாக புகார் உள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் சிபிஐயின் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலர்கள் இன்று (ஜன.15) அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவரை சிபிஐ பொருளாதார குற்றப்பிரிவு அலுவலர்கள் கைது செய்துள்ளனர். மேலும் அவர் மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆக அவரை அமலாக்கத்துறை அலுவலர்களும் கைது செய்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
சுப்ரா குண்டு நடத்திய போன்ஸி நிறுவனம் ஆயிரக்கணக்கான மக்களின் வைப்புத்தொகையை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. முன்னதாக குறைந்த முதலீடு, அதிக வருமானம் ஒன்று போலியான சட்டவிரோத திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்தியது அலுவலர்கள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
சிபிஐ வட்டாரங்களின்படி, இத்தகைய திட்டங்கள் மூலம் ரோஸ் வேலி சம்பாதித்த ரூ.12 ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதித்து இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஸ் வேலி குழுமம் நாடு முழுவதும் உள்ள ஹோட்டல் மற்றும் ரிசார்ட்டுகளிலும் கணிசமான முதலீடுகளை செய்துள்ளது என்று சிபிஐ அலுவலர்கள் தெரிவித்தனர்.