மாணவனை மலம் அள்ள வைத்த நில உரிமையாளரை கைதுசெய்யக் கோரி உறவினர்கள் மாவட்ட துணை கண்காணிப்பாளரிடத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
பென்னாகரம் அடுத்த கோடாரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் குடும்பத்துடன் கோடாரம்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலராக பணியாற்றி வருகிறார்.
வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை: வீடியோ வைரல்!
மூர்த்தியின் மகன் ஒன்பதாம் வகுப்பு முடித்து பத்தாம் வகுப்பு செல்கிறார். இரு தினங்களுக்கு முன்பு ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான காலியான விவசாய நிலத்தில் மூர்த்தியின் மகன் இயற்கை உபாதையைக் கழிக்க ஒதுங்கியுள்ளார். இதனைபார்த்த நிலத்தின் உரிமையாளர் ராஜசேகர் விவசாய நிலத்தில் மலம் கழித்த மாணவனை, மலத்தை கையில் அள்ளி நிலத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறி அடித்துள்ளார்.
இதனையடுத்து மாணவன் தன் கைகளால் மலத்தை அள்ளி விவசாய நிலத்தில் இருந்து 150 மீட்டர் கடந்து சென்று அப்புறப்படுத்தியுள்ளார். சிறுவனை அடித்த சம்பவத்தை பார்த்த அவ்வழியாக சென்ற ஒரு நபர், ’ஏன் சிறுவனை அடிக்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, நிலத்தின் உரிமையாளர் தட்டிக்கேட்ட அவரை எச்சரித்து அனுப்பியுள்ளார்.
மாடு மேய்க்கச் சென்ற இளம்பெண் பாலியல் வல்லுறவு செய்து கொலை!
பாதிக்கப்பட்ட மாணவன் தனக்கு நடந்த கொடுமையை தனது தந்தை மூர்த்தியிடம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து மாணவனின் தந்தை பென்னாகரம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன் மகனை அடித்த ராஜசேகர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார்.
கிருஷ்ணமூர்த்தியின் புகாரை ஏற்றுக்கொண்ட பென்னாகரம் காவல் துறையினர், சிறுவனை மலம் அள்ள வைத்து அடித்து துன்புறுத்திய ராஜசேகர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். சிறுவனை கையால் மலம் அள்ள வைத்து அடித்து துன்புறுத்திய விவகாரம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.