மதுரை மாவட்டம் நாராயணபுரம் பகுதியில் பாரத் ஸ்டேட் பாங்க் உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த குமரவேல் மற்றும் பெருமாள் ஆகிய இருவரும் திருப்பரங்குன்றம் பகுதியில் தங்களுக்குச் சொந்தமாக நிலம் இருப்பதாக திருப்பரங்குன்றம் சார்பதிவாளர் உதவியுடன் போலி ஆவணங்களைத் தயார் செய்துள்ளனர். அதன்பின், போலி ஆவணங்களை அளித்து வங்கியில் வீட்டுக் கடனாக சுமார் 6.30 லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், வங்கியின் தணிக்கைக் குழு ஆவணங்களை ஆய்வு செய்தபோது திருப்பரங்குன்றம் பகுதியில் அப்படி ஒரு நிலமே இவர்கள் பெயரில் இல்லை என்றும் இருவரும் போலியான ஆவணங்களைத் தயார் செய்து வங்கி அலுவலர்ககளை ஏமாற்றியதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வங்கியின் மேலாளர் சையத் இஸ்மாயில் அளித்த புகாரைத் தொடர்ந்து இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.