சென்னையில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாவட்ட தலைவர் சாகுல் தலைமையில் பிராட்வே குறளகத்தில் தொடங்கி ஆர்.ஏ மன்றம் வரையில் அனுமதியின்றி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.
நேற்று காலை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் அப்துல் ரஹீம் உள்பட 2,500 பேர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து அனுமதியின்றி போராடியதாகவும், தொற்றுநோய் பரப்பக்கூடிய வகையில் போராடியதாகவும் 2,500 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.