இம்பால்: மணிப்பூர் தவுபால் என்ற மாவட்டத்தில் கமு என்ற பகுதியில் 287 கோடி ரூபாய் மதிப்புள்ள 72 கிலோ போதைப் பொருளுடன் (பிரவுன் சுகர்) நேற்று(நவ.11) சிக்கியுள்ளது. அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கையால் இது கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறையின் அறிக்கையில், நவம்பர் 10-11 தேதிகளில் அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் காவல்துறையினரால் பல குழுக்கள் தொடங்கப்பட்டன.
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கமு என்ற பகுதியில் இருந்து போதைப் பொருள் (பிரவுன் சுகர்) மறைத்து வைத்து கடத்தப்படுவதாக பாதுகாப்பு படையினர் மூலம் உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் நவம்பர் 10-11 தேதிகளில் அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் காவல்துறையினரால் பல குழுக்கள் தொடங்கப்பட்டு தேடுதல் பணி நடத்தப்பட்டது.
இந்நிலையில் , கடுமையான தேடுதலுக்கு பிறகு நேற்று (நவ.11) அதிகாலை மூன்று பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 72 கிலோ பிரவுன் சுகர் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சந்தை மதிப்பு ரூ. 287 கோடிக்கு மேல் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: கிளப்பில் சூதாட்டம்: 13 பேர் கைது, 11 செல்போன்கள், ரூ.42,000 பறிமுதல்!