ETV Bharat / jagte-raho

மது போதையில் அண்ணனை குத்தி கொலை செய்த தம்பி - போலீஸ் விசாரணை - brother killed elder

கோவில்பட்டி அருகே மது போதையில் அண்ணனை குத்தி கொலை செய்த தம்பியால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

brother stabbed elder brother in kovilpatti

author img

By

Published : Nov 15, 2020, 12:09 PM IST

தூத்துக்குடி: மது போதையில் அண்ணனை தம்பி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள அழகப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய பாண்டியன். இவருக்கு செல்லப்பாண்டி, முத்துப்பாண்டி ஆகிய இரு மகன்கள் உள்ளனர். தீபாவளியான நேற்று நள்ளிரவு (நவ. 14) அண்ணன்‌, தம்பி இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.

அப்போது அண்ணன், தம்பி இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைக்கலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி அண்ணன் என்றும் பாராமல் செல்லப்பாண்டியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே செல்லப்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து நாலாட்டின்புதூர் காவல் துறையினர், செல்லப்பாண்டி உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.