கம்போடியாவிலிருந்து மலேசியா வழியாக சென்னைக்கு வந்த விமானத்தில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள, தடை செய்யப்பட்டுள்ள உடல் கட்டமைப்பு போதை மாத்திரைகள் மற்றும் இன்ஜெக்சன் மருந்து பாட்டிகள் கொண்ட 8 பண்டல்களை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் .
போதை மருந்து, மாத்திரைகளை சூட்கேஸ் மற்றும் பைகளில் மறைத்து எடுத்து வந்த கொல்கத்தாவைச் சோ்ந்த ராஜன் மிஸ்ரா (46) என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இவா் ஏற்கனவே பலமுறை இதே போன்ற போதை மாத்திரை, மருந்துகளை விமானத்தில் கடத்தி வந்து லக்னோ, கொல்கத்தா, டில்லி போன்ற வடமாநிலங்களில் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.