ETV Bharat / jagte-raho

வங்கி மோசடி வழக்கு: அதிமுக முன்னாள் எம்.பி. குற்றவாளி எனத் தீர்ப்பு! - வங்கி மோசடி

சென்னை: வங்கி மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் உள்பட மூன்று பேரை குற்றவாளிகள் என எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ex mp
ex mp
author img

By

Published : Mar 4, 2020, 3:17 PM IST

கடந்த 2014-2019இல் திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினராக இருந்தவர் கே.என். ராமச்சந்திரன். கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலரான இவர், அந்த அறக்கட்டளையின்கீழ் இயங்கும் சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியை விரிவாக்கம் செய்ய, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற ராமச்சந்திரன் விண்ணப்பித்துள்ளார்.

அப்போது, விண்ணப்பத்தை பரிசீலிக்க, தனக்கும் குடும்பத்தாருக்கும் அமெரிக்கா சென்றுவர விமான கட்டணமாக இரண்டு லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை பெற்ற மேலாளர் தியாகராஜன், 20 கோடி ரூபாய் கடன் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, வங்கி மேலாளர் தியாகராஜன், கல்லூரித் தலைவர் ராஜசேகரன் (ராமச்சந்திரன் மகன்), அறக்கட்டளை நிர்வாகியாக இருந்த ராமச்சந்திரன் ஆகியோர் மீது 2015ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன் விசாரித்தார்.

இந்நிலையில், அனைத்து விசாரணையும் முடிவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதி லிங்கேஸ்வரன் இன்று வழங்கினார். அதில், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பேரையும் குற்றவாளிகள் என அறிவித்து, தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: நீர் மேலாண்மையை ஊக்குவிக்கும் முதலமைச்சர் பழனிசாமி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.