புதுச்சேரி தேங்காய்திட்டு பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன். இவர் தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் DS சூப்பர் மார்க்கெட் கடையை நடத்தி வருகின்றார். இந்நிலையில், நேற்று இரவு இவரது கடைக்கு மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் திருட வந்தனர். அவர்கள் முதலில் கிரில் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்துள்ளனர்.
பின்னர் அங்குள்ள இரண்டாவது கதவை திறக்க முயற்சி செய்து கதவை திறக்க முடியாததால் திருடர்கள் அங்கிருந்த ஐஸ்கிரீம், ஜூஸ் பாட்டில்களை எடுத்து சாப்பிட்டுவிட்டு அங்கிருந்த சிசிடிவி கேமாராவை துணியை வைத்து மூடிவிட்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து, வழக்கம்போல் காலை கடையை திறந்த தமோதரன் பொருட்கள் இடம் மாறி இருப்பதைக்கண்டு சிசிடிவி காட்சியை பார்த்தபோது திருடர்கள் வந்து சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, தமோதரன் சிசிடிவி காட்சிகளை கொண்டு , தவளக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தகவலையடுத்து சிசிடிவி காட்சிகளை கொண்டு திருடர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும் திருட வந்தவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் போல் இருப்பதால் காவல் துறையினர் அங்கிருந்த சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பத்து லட்சம் மதிப்பிலான பொருட்களுடன், சிசிடிவி பதிவையும் கொள்ளையடித்த திருடர்களால் பரபரப்பு!