சென்னை மாதவரம் காவல் நிலையத்தில் உதவி ஆணையளராக அருள் சந்தோசம் முத்து பணிபுரிந்துவருகிறார். இவரது பெயரில் ஃபேஸ்புக் பக்கத்தில் போலி கணக்கு ஒன்றை தொடங்கிய அடையாளம் தெரியாத நபர்கள், அதன்மூலம் குறுந்தகவல்கள் அனுப்பி பணம் பறிக்க முயற்சித்துள்ளனர்.
![Attempting to snatch cash by creating fake FB account](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-11-cheating-script-7202290_10092020225743_1009f_1599758863_902.jpg)
அருள் முத்து என்ற பெயரிலுள்ள அந்த ஃபேஸ்புக் கணக்கு மூலம் நண்பர்களாக இருப்பவர்களிடம் நலம் விசாரிப்பதுபோல் பேச்சுக்கொடுத்து, பின்னர் அவசர உதவிக்குப் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர் இந்தக் கணக்கைத் தொடங்கியவர்கள். தொலைபேசி எண் ஒன்றை கொடுத்து, இந்த எண்ணுக்கு கூகுள் செயலி மூலம் 10 ஆயிரம் ரூபாய் தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
![Attempting to snatch cash by creating fake FB account](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-11-cheating-script-7202290_10092020225743_1009f_1599758863_350.jpg)
ஃபேஸ்புக்கில் தனது பெயரில் போலி கணக்கு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த அருள் சந்தோசம் முத்து, பின்னர் இது தொடர்பாக சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
![Attempting to snatch cash by creating fake FB account](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-11-cheating-script-7202290_10092020225743_1009f_1599758863_428.jpg)
உதவி ஆணையர் பெயரிலேயே போலியாக ஃபேஸ்புக் கணக்கு வைத்து, பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கும்பலை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: கன்னட சினிமா பாணியில் கொள்ளை சம்பவம்: விரட்டிப்பிடித்த தமிழ்நாடு காவல் துறை!