ETV Bharat / jagte-raho

'ரூ.10லட்சம் மதிப்புள்ள பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல்'

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே பாண்டிச்சேரியிலிருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள எரிசாரயம், மதுபாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

alcohol smuggling from pondicherry
author img

By

Published : Oct 13, 2019, 9:39 PM IST

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் பாண்டிச்சேரியிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக மதுவிலக்கு குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாவட்ட காவல் ஆணையர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளர் செல்வநாயகம் தலைமையில் தனிப்படை அமைத்து சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இனறு அதிகாலை 5 மணிக்கு அரசூர் - பண்ருட்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியே வந்த லாரி ஒன்றை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.

அதில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,500 லிட்டர் எரிசாராயமும், 4,800 பாண்டிசேரி மதுபாட்டில்களும் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட எரிசாரயங்களை காவல் ஆணையர் ஆய்வு செய்கிறார்

இதையும் படிங்க:சட்டவிரோத டாஸ்மாக் மதுபான விற்பனை - தடைகோரி தீர்மானம்
!

Intro:tn_vpm_03_10_latcham_sarakku_parimuthal_vis_tn10026.mp4Body:tn_vpm_03_10_latcham_sarakku_parimuthal_vis_tn10026.mp4Conclusion:10 லட்சம் மதிப்புள்ள அரசு தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் மற்றும் 4800 மதுபாட்டில்கள், மினி லாரி உட்பட போலீசார் பறிமுதல் - மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் விசாரணை செய்தார்.

விழுப்புரம் மாவட்டம்,
உளுந்தூர்பேட்டை அருகே திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லையில் மது விலக்கு குற்றங்களை தடுக்கும் பொருட்டு மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து உதவி ஆய்வாளர்கள் செல்வநாயகம், அகிலன், மாணிக்கம் மற்றும் முதல்நிலைக் காவலர் மதுரவீரன் ஆகியோர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அரசூர் டூ பண்ருட்டி சாலையில் காலை 5 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமாக டிஎன்12 பி 3370 என்ற கொண்ட மினி லாரி மேல் தணியலாம்பட்டு ரோடு அருகே அதிவேகமாக வந்த லாரியை போலீசார் மடக்கிப்பிடித்து மினி லாரியை சோதனை செய்ததில் தமிழக அரசு தடைசெய்யப்பட்ட சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 50 கேனில் 1,500 லிட்டர் எரிசாராயம், 4800 அரசு தடை செய்யப்பட்ட பாண்டிசேரி மது பாட்டில்களும் மற்றும் இரண்டு சாக்கு மூட்டையில் 5 லிட்டர் கொண்ட 16 பிளாஸ்டிக் கவரில் 80 லிட்டர் எரிசாராயம் என அனைத்தையும் பறிமுதல் செய்து விசாரணை செய்தனர்.
மினி லாரி ஓட்டுனர் விழுப்புரம் மாவட்டம் பரிசுரெட்டிபாளையம் சேர்ந்த ரவி மகன் அசோக் (25) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பிடிபட்ட கள்ளசாராயம் மற்றும் மது பாட்டில்களை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் அவர்கள் நேரில் விசாரணை செய்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.